சிங்கப்பூரில் இணைய பாதுகாப்பு திட்டம் அறிமுகப்படுத்தப் படும்!

சிங்கப்பூரில் இளைஞர்களுக்கு இணையப் பாதுகாப்பைப் பற்றி கற்றுக் கொடுக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த இணைய பாதுகாப்பு திட்டம் அவர்களுக்கு மின்னிலக்க தற்காப்பு பற்றி கற்பிக்கப்படும்.

மின்னிலக்க அச்சுறுத்தலுக்கு எதிராக சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்து இருக்கவேண்டும்.

கடந்த ஆண்டு சில உயர்நிலைப் பள்ளிகளிலும்,உயர்நிலைக்கு பிந்திய கல்வி நிலையங்களிலும் மின்னிலக்க தற்காப்பு முக்கியத்துவத்தை வலியுறுத்த முன்னோடி திட்டம் அறிமுகம் கண்டது.

இதில் சுமார் 300 க்கும் அதிகமான இளைஞர்கள் கலந்துக் கொண்டனர்.

அவர்களுக்கு பல்வேறு மின்னிலக்க திறன்கள் பற்றி கற்பிக்கப்படுகின்றன.

அங்கு நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும்.

அதேபோல் மாணவர்களுக்கும் கிடைக்கும்.இது இளைஞர்கள் அவர்களுடைய பங்கை அளிக்க உதவும் முயற்சிகளின் ஒரு பகுதி என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் Zaqy Mohamed கூறினார்.