இணைய கோளாறு..!! சாங்கி விமான நிலையத்தில் 108 விமானங்கள் தாமதம்.!!
சிங்கப்பூர்: சைபர் செக்யூரிட்டி மென்பொருள் நிறுவனமான CrowdStrikeல் ஏற்பட்ட கோளாறு காரணமாக சாங்கி விமான நிலையத்தில் 108 விமானங்கள் அரை மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக புறப்பட்டது.
உலகளாவிய இணையச் சேவை செயலிழப்பால் சாங்கி விமான நிலையத்தில் எத்தனை விமானங்கள் பாதிக்கப்பட்டன என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு போக்குவரத்து அமைச்சர் சீ ஹாங் டாட் பதிலளித்தார்.
சாங்கி விமான நிலையம் ஒவ்வொரு நாளும் சராசரியாக 1,000 விமானங்களைக் கையாளுகிறது.
சாங்கி விமான நிலையக் குழுமம், பாதிக்கப்பட்ட விமான நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்ட பிறகு வேறு வழிகளில் அதை கையாண்டனர்.
போர்டிங் பாஸ் எழுதி நிரப்புதல், கூட்டத்தை நிர்வகித்தல் போன்ற செயல்பாடுகளை அதிகாரிகள் செயல்படுத்தினர்.
இதுபோன்ற சூழ்நிலையில் தொடர்ந்து செயல்படுவதற்கான திட்டங்களை சாங்கி விமான நிலைய குழு மறுஆய்வு செய்யத் தொடங்கியுள்ளதாக அமைச்சர் சீ கூறினார்.
Follow us on : click here