அனைத்துலக பண நிதியம் இவ்வாண்டின் வளர்ச்சி முன்னுரைப்பை திருத்தியுள்ளது. சீனாவின் பொருளியல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் முழு வீச்சில் பல நன்மைகள் அளிக்கும். இதனை மந்த நிலை மட்டுப்படுத்தக் கூடும் என்று தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரின் வளர்ச்சி கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 புள்ளி 3 விழுக்காடாக இருந்தது இதனை, ஒன்றரை விழுக்காடாக கீழ்நோக்கித் தற்போது திருத்தப்பட்டுள்ளதாக பண நிதியம் தெரிவித்தது.
இவ்வாண்டு பண வீக்கத்தை எதிர்கொள்ளக் கூடும் என்று பண நிதியம் தெரிவித்தது. இதற்குக் காரணம் பொருள்,சேவை வரி உயர்வு என்று நிதியம் கணிக்கிறது.சிங்கப்பூர் வர்த்தக நடுவாக திகழ்வதால்சிங்கப்பூர் அதிகமான முதலீடுகளை இருக்க முடியும் என்று பண நிதியம் தெரிவித்தது. இதன் மூலமாக பொருளியல் ஓரளவுக்கு ஏற்றத்தையும் காண முடியும் என்றும் பண நிதியம் குறிப்பிட்டது.