Tamil Sports News Online

சிங்கப்பூர் அரசாங்கத்திடம் அனைத்துலக ஆலோசனைக் குழு பரிந்துரை!

வேலை நடக்கும் இடத்தில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் அனைத்துலக ஆலோசனை குழு அரசாங்கத்திடம் 8 பரிந்துரைகளை முன்வைத்தது.இப்பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.

ஏனென்றால், இது வேலை நடக்கும் இட பாதுகாப்பு,சுகாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்தது.வேலைச் செய்யும் இடத்தில் நடக்கும் அசம்பாவிதங்களைக் குறைக்கவும்,பசுமைத் தொழிலநுட்பம், பருவநிலை மாற்றம் ஆபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில் இப்பரிந்துரை முன்வைக்கப் பட்டதாக அனைத்துலக ஆலோசனை குழு தெரிவித்தது.

கடந்த 2022-ஆம் ஆண்டு வேலைச் செய்யும் இடத்தில் பாதுகாப்புக் குறைபாடுகளால் பல விபத்துகள் ஏற்பட்டுள்ளது.போதுமான அளவில் பாதுகாப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். நடைமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்றும் தெரிவித்தது.

நிறுவனங்கள், வேலைச் செய்யும் இடத்தில் ஊழியர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் சுட்டிக் காட்டினர்.ஊழியர்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதைப் பற்றி தெரிவிக்க பாதுகாப்பான சூழலை நிறுவனங்கள் அமைத்து தர வேண்டும் என்றும் அனைத்துலக ஆலோசனை குழு தெரிவித்தது. இத்தகைய காரணத்தால் இப்பரிந்துரை அரசாங்கதால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.