Latest Singapore News in Tamil

சிங்கப்பூர் வங்கிகளில் பணம் சேமித்தால் வட்டி அதிகம்!

சிங்கப்பூரில் உள்ள வங்கிகளில் வைப்புத் தொகையின் வட்டி விகிதம் உயர்ந்துள்ளது. இதனால், வைப்புத் தொகையில் சேமிப்பது அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரில் வெள்ளிக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டு நாணயங்களுக்கும் அதிக வட்டி தரப்படுகிறது.

சிங்கப்பூரில் இருக்கும் பல்வேறு வங்கிகள் அமெரிக்க டாலர், ஆஸ்திரேலியா டாலர், பிரிட்டிஷ் பவுண்ட் முதலிய வெளிநாட்டு நாணயங்கள் சேமிப்பது அதிகரித்துள்ளது என்று CNA விடம் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூர் வங்கிகளில் 4 முதல் 5 விழுக்காடு வரை அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களுக்கு வட்டி தரப்படுகிறது.

சிங்கப்பூர் வங்கிகளில் வைப்புத் தொகையில் வைக்கும் வெள்ளிக்கு 4 விழுக்காட்டுக்கு மேல் வட்டி வழங்கப்படுவதாகவும் தெரிவித்தன.