சிங்கப்பூரில் நைட்ரஜன் சல்ஃபைட் வாயுவைச் சுவாசித்த சம்பவம்!! மருத்துவமனையில் இருக்கும் இரண்டு ஊழியர்களின் தற்போதைய நிலை?

சிங்கப்பூரில் நைட்ரஜன் சல்ஃபைட் வாயுவைச் சுவாசித்த சம்பவம்!! மருத்துவமனையில் இருக்கும் இரண்டு ஊழியர்களின் தற்போதைய நிலை?

சோவா சூ காங் தண்ணீர் ஆலையில் பராமரிப்பு பணியின் போது ஆபத்தான வாயுவை சுவாசித்த இரண்டு துணை ஒப்பந்த ஊழியர்கள் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் மே 23 அன்று நடந்தது.

மூன்று ஊழியர்கள் ஹைட்ரஜன் சல்ஃபைட் வாயுவை சுவாசித்ததால் அவர்கள் சுயநினைவை இழந்தனர்.

துரதிர்ஷ்டவசமாக, சூப்பர்சோனிக் பராமரிப்பு சேவைகளில் துப்புரவு இயக்க மேலாளராக இருந்த 40 வயதான இந்திய நாட்டவர் ஒருவர் அதே நாளில் இறந்தார்.

மலேசியாவைச் சேர்ந்த மற்ற இரண்டு தொழிலாளர்கள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

அவர்களின் குடும்பங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

மேலும் இந்த இரண்டு தொழிலாளர்களில் ஒருவரின் முதலாளியான Stargroup Est, ஊழியரின் குடும்ப உறுப்பினர்கள் விரும்பினால் மருத்துவமனை வருகையை எளிதாக்க சிங்கப்பூரில் அவர்கள் தங்கும் ஹோட்டல் செலவை ஏற்றுகொள்ள தயாராக உள்ளதாக தெரிவித்தது.

சிகிச்சை பெற்று வரும் ஊழியர் அவரின் வழக்கமான ஊதியத்தைப் பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் சுவாசித்த வாயு மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது மற்றும் எரியக்கூடிய வாயு ஆகும். இது அழுகிய முட்டைகளைப் போன்ற வாசனையுடன் இருக்கும்.

தேசிய நீர் நிறுவனமான PUB, இறந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்தது.

மனிதவள அமைச்சகம் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க சரியான காற்றோட்டம், எரிவாயு கண்காணிப்பு சாதனங்கள், முகக் கவசம் மற்றும் சுவாசக் கருவிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களின் முக்கியத்துவத்தை MOM எடுத்துரைத்தது.