Latest Singapore News

சிங்கப்பூரில் துப்புரவு துறையின் உரிமம் பற்றிய தகவல்கள்!

அடுத்த ஆண்டு(2024), சிங்கப்பூரில் துப்புரவு துறையின் தர நிலையை உயர்த்தும் நோக்கில் உரிமம் வழங்குவதன் தொடர்பான புதிய கட்டமைப்பு அறிமுகம் செய்யப் பட உள்ளது. சுற்றுபுற பொது சுகாதார சட்ட திருத்த மசோதாவில் முன் வைக்கப்பட்ட மாற்றங்களில் இதுவும் ஒன்று. துப்புரவு நிறுவனங்கள் மனித வளம்,ஊழியர்களின் செயல் திறன் ஆகியவற்றில் கூடுதல் முதலீடு செய்வதற்கு அதிக மூலதனத்தைக் கொண்டு இருக்க வேண்டும்.

புதிய கட்டமைப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் நடப்பிற்கு வரும் என்று அறிவித்துள்ளனர்.உரிமங்கள் மூன்று பிரிவுகளில் வழங்கப்பட திட்டமிட்டுள்ளது. அவற்றின் தவணை காலம் ஈறாண்டுகள் ஆகும் .

முதல் இரண்டு பிரிவுகளில் கீழ் வழங்கப்படும் உரிமங்களை நிறுவனங்கள் புதிப்பிக்கலாம். அவற்றை பெற முதலீட்டையும், வேலையிடும் பாதுகாப்பு சான்றிதழ்களையும் முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும். மூன்றாம் பிரிவின் கீழ் வழங்கப்படும் உரிமம் ஈறாண்டுகளுக்கு பின் காலாவாதி ஆகிவிடும். அதை மீண்டும் புதுப்பிக்க இயலாது.

புதிதாக தொடங்கவிற்கும் துப்புரவு நிறுவனங்களுக்கு உகந்ததாக இருக்கும் என்று கூறப் படுகிறது. இருபத்தாயிரம் வெள்ளி முதலீட்டை செலுத்த முடியாத சிறிய நிறுவனங்களுக்கும் இது பொருந்துகிறது.

அத்தகைய நிறுவனங்கள் ஈறாண்டுகளுக்குள் முதல் பிரிவு அல்லது இரண்டாம் பிரிவு உரிமத்தை பெறும் அளவிற்கு தர நிலைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.

அவ்வாறு செய்ய தவறும் நிறுவனங்கள் துப்புரவு துறையை விட்டு வெளியேற வேண்டியதாக இருக்கும்.சிங்கப்பூரில் 1500 துப்புரவு நிறுவனங்கள் செயல் படுகின்றனர்.அவற்றில் மூன்றில் ஒரு பகுதி முதல் இரண்டு பிரிவின் கீழ் வழங்கப்படும் உரிமத்தைப் பெற்றுள்ளதாக தேசிய சுற்றுபுற அமைப்பு கூறியுள்ளது.