தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் Leong Mun Wai சிங்கப்பூரர் அல்லாத தமிழாசிரியர்கள் எத்தனை பேர் சிங்கப்பூரில் வேலை செய்கின்றனர். மேலும் கூடுதலானவர்களை வேலைக்கு சேர்க்க திட்டம் உள்ளதா என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை சிங்கப்பூரர் அல்லாத 24 பேர் தமிழாசிரியர்களாக வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறினார்.
வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் என்றும் கூறினார்.
தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் கேட்ட கேள்விக்கு கல்வி அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
ஆசிரியர் வேலைக்கு தகுந்த திறன்களை உடையவர்களை சேர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்படுவதாகவும் கூறினார்.
எனினும், தமிழ்மொழி உட்பட ஒரு சில பாடங்களுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் அழைக்கப்படுகின்றனர்.
அந்த வேலைக்கு உள்ளூரிலிருந்து விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்பட்சத்தில் இது செய்யப்படுகிறது என்றார்.
வெளிநாட்டில் இருந்து ஊழியர்களை பணி அமர்த்தும்போது அவர்களுக்கு நற்பெயர்,அனுபவம் மற்றும் உள்ளூர் கலாச்சாரத்தை உள்வாங்கும் திறன் ஆகியவை உறுதி செய்யப்படுவதாகவும் கூறினார்.