மூன்று நாட்களில் தனது சொத்தில் பாதியை இழந்த இந்தோனேசிய பெண்…!!!

மூன்று நாட்களில் தனது சொத்தில் பாதியை இழந்த இந்தோனேசிய பெண்...!!!

இந்தோனேசியாவில் செல்வவளம் மிக்க பெண்மணி ஒருவர் மூன்று நாட்களில் தனது சொத்தில் கிட்டத்தட்ட பாதியை இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மரினா புடிமானின் சொத்து மதிப்பானது 7.5 பில்லியன் டாலரிலிருந்து 4.4 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

இந்தோனேசியாவின் பங்குச் சந்தை விலைகள் வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியுள்ளதால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மார்ச் 18 அன்று மட்டும் இந்தோனேசிய பங்குகள் 7.1 சதவீதம் சரிந்தன.

நாட்டின் மிகப்பெரிய தரவு மையமான DCl இன் பங்கு விலைகள் மிகவும் குறைந்தது.

இதனால் DCI இன் மிகப்பெரிய பங்குதாரர்களில் ஒருவரான புடிமானின் சொத்து மதிப்பும் குறைந்தது.

கடந்த சில வாரங்களாக பங்குச் சந்தையில் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டது.

இதன் விளைவாக, புடிமான் ஒரு நாளைக்கு கூடுதலாக $350 மில்லியன் சம்பாதித்ததாக கூறப்படுகிறது.

நாட்டின் பலவீனமான பொருளாதாரம் மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் நாணய மதிப்பு குறித்து முதலீட்டாளர்கள் தற்போது கவலையில் உள்ளனர்.