Singapore job news online

இன்று முதல் பேரங்காடிகளில் கிடைக்கும் இந்தோனேஷியா முட்டை!

இந்தோனேஷியாவிலிருந்து புதிதாக தருவிக்கப்படும் முட்டைகள் FairPrice பேரங்காடிகளில் விற்பனைக்கு வருகின்றன.

Fairprice Finest,FairPrice Xtra,FairPrice பேரங்காடிகள் உள்ளிட்ட பேரங்காடிகளில் அவற்றை வாங்கலாம்.

இன்று முதல் தீவு முழுவதும் 64 பேரங்காடிகளில் முட்டைகள் கிடைக்கும்.

இந்தோனேஷியாவிலிருந்து தருவிக்கப்படும் முட்டைகளை விற்கும் முதல் சிங்கப்பூர் பேரங்காடி FairPrice.

FairPrice பேரங்காடி மொத்தம் 11 நாடுகளிலிருந்து முட்டைகளை வரவழைக்கிறது.

அவைகள் 60க்கும் மேற்பட்ட சின்னங்களில் விற்கப்படுகிறது.

Eco Farm Fresh Eggs வகையிலான 10 முட்டைகள் $3.40 க்கு விற்கப்படுகிறது.

அவை இன்னும் கூடுதலான கடைகளில் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது.