உலகின் மோசமான விமானச் சேவையில் இடம்பெற்ற இண்டிகோ…!!!

உலகின் மோசமான விமானச் சேவையில் இடம்பெற்ற இண்டிகோ...!!!

சிங்கப்பூர்:இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, உலகின் மோசமான விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.

ஐரோப்பிய நிறுவனமான ஏர்ஹெல்ப் இந்த ஆண்டுக்கான விமானப் போக்குவரத்துப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

109 விமான நிறுவனங்களில் இண்டிகோ 103வது இடத்தில் உள்ளது.

இண்டிகோ நிறுவனமானது இந்த ஆய்வை நிராகரித்தது.

நேரத்துடன் செயல்படுதல், வாடிக்கையாளர் கருத்து, இழப்பீடு போன்றவற்றின் அடிப்படையில் ஏர்ஹெல்ப் விமான நிறுவனங்களை வரிசைப்படுத்துகிறது.

மற்றொரு இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியா 61வது இடத்தில் உள்ளது.

மேலும் Tunisair மிக மோசமான விமானச் சேவை நிறுவனமாக இடம்பெற்றது.

ஏர்ஹெல்ப்பின் ஆய்வில் கோளாறு இருப்பதாக இண்டிகோ பதிலளித்துள்ளது.

மேலும் இது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையை கொண்டு கணக்கிடப்படவில்லை.

இண்டிகோ நிறுவனமானது சரியான நேரத்தில் செயல்படுதல் போன்றவற்றில் அதன் ரேட்டிங்ஸ் மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து குறைவான புகார்கள் ஆகியவற்றை அது சுட்டிக்காட்டியது.

Follow us on : click here ⬇️