தாய்லாந்தில் இந்தியர்கள் கைது!!நடந்தது என்ன?

தாய்லாந்தில் இந்தியர்கள் கைது!!நடந்தது என்ன?

சிவப்பு பாண்டா, உடும்பு, பாம்பு, கிளி உட்பட 87 விலங்குகளை தாய்லாந்தில் இருந்து இந்தியாவிற்கு கடத்த முயன்ற ஆறு பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்கள் ஆறு பேரும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் அந்த விலங்குகளை தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு கடத்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோதமாக விலங்குகளை கடத்துவது தெரிய வந்தது.

அதிகாரிகள் அந்த விலங்குகளை பறிமுதல் செய்தனர்.

குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இறக்குமதி வரியைப் போன்று நான்கு மடங்கு அபராதம் விதிக்கப்படலாம்.