மலேசியாவில் திடீர் பள்ளத்தில் விழுந்த இந்திய பெண்!! நான்காவது நாளாக தொடரும் தேடுதல் பணி!!

மலேசியாவில் திடீர் பள்ளத்தில் விழுந்த இந்திய பெண்!! நான்காவது நாளாக தொடரும் தேடுதல் பணி!!

மலேசியாவின் கோலாலம்பூரில் 8 மீட்டர் ஆழமுடைய பாதாளக் குழியில் விழுந்த இந்திய சுற்றுலா பயணியை தேடும் பணி நான்காவது நாளாக தொடர்கிறது.

குழியில் விழுந்த 48 வயது பெண்ணின் குடும்பத்தினருக்கு மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருமதி விஜயலட்சுமி இந்தியாவில் இருந்து கோலாலம்பூருக்கு 2 மாத பயணமாக வந்திருந்தார்.

அவர் ஆகஸ்ட் 23 அன்று காலை 8.30 மணியளவில் ஜாலான் மஸ்ஜித் இந்தியா நடைபாதையில் உள்ள ஒரு திறந்த குழியில் திடீரென விழுந்தார்.

அவரைக் காப்பாற்றும் முயற்சியில் தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்.

தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறிய திரு.அன்வார் மண் அரிப்பைச் சமாளிக்க வேண்டிய நிலை உள்ளதாக கூறினார்.

மேலும் அதிகாரிகள் ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் உள்ள ஆறு வடிகால்களையும் சோதனைச் செய்தனர்.

இதுவரை குழியில் விழுந்த பெண் குறித்து எந்த அறிகுறியும் இல்லை.

அவரது செருப்பு மட்டுமே கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

மேலும் அவர் ஆகஸ்ட் 24 அன்று இந்தியாவுக்கு திரும்புவதாக இருந்தது என ஸ்டார் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் தேடுதல் மீட்பு பணிக்காக ஃப்ளஷிங் நுட்பம் கட்டங்களாக நடத்தப்பட்டு வருவதாக கோலாலம்பூர் சிட்டி ஹால் தெரிவித்துள்ளது.