சாங்கி விமான நிலையத்தில் கடைகளில் திருடிய இந்தியப் பெண்!!

சாங்கி விமான நிலையத்தில் கடைகளில் திருடிய இந்தியப் பெண்!!

சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தின் இடைவழிப் பகுதி எனும் transit Area இல் உள்ள கடைகளில் சென்ற ஆண்டு (2024) டிசம்பர் மாதம் 23ஆம் தேதி அன்று 62 வயதுடைய இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண் பொருள்களைத் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நான்கு கடைகளில் இருந்து சுமார் 1122 வெள்ளி மதிப்புடைய பொருள்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறைக்கு தகவல் வந்தது.

சந்தேக நபர் ஒருவர் கடைகளுக்குள் சென்று எந்த ஒரு பொருளும் வாங்காமல் கடைக்குள் வருவதையும் வெளியேறுவதையும் அங்கிருந்த ஊழியர் ஒருவர் பார்த்தார்.

கடையிலிருந்து பொருட்கள் காணாமல் போனதை உறுதி செய்த பின் அவர் காவல்துறைக்கு புகார் கொடுத்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சந்தேக நபர் சிங்கப்பூரை விட்டு வெளியேறுவதற்கு முன் அவரை கைது செய்தது.

அந்த பெண் நான்கு கடைகளில் இருந்தும் வெவ்வேறு பொருட்களை பணம் செலுத்தாமல் திருடியதாக கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் இன்று(ஜனவரி 23) அவரை ஆஜர்படுத்தி அவர் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டு சிறைதண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.