42 ஆண்டுகளாக பஹ்ரைனில் தவித்த இந்தியர்!!

42 ஆண்டுகளாக பஹ்ரைனில் தவித்த இந்தியர்!!

பஹ்ரைனில் மாட்டிக்கொண்ட இந்தியர் ஒருவர் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.அவர் 42 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பியிருக்கிறார்.

பஹ்ரைனுக்கு வேலைக்காக சென்ற 74 வயதுடைய கோபாலன் சந்திரன் சுமார் 42 ஆண்டுகளாக அவருடைய குடும்பத்தை பார்க்கவில்லை.இந்த தகவலை Hindustan Times நாளேடு வெளியிட்டுள்ளது.

பஹ்ரைனுக்கு வேலைக்காக அவர் சென்றிருந்தார்.அவர் சென்ற சில நாட்களிலேயே அவரது முதலாளி இறந்து விட்டார்.அதன் அவரது பாஸ்போர்ட் தொலைந்து போனது.என்ன செய்வது என்று தெரியாமலும் பஹ்ரைனின் குடிநுழைவு சட்டங்களால் மேலும் சிரமப்பட்டார்.கிட்டத்தட்ட 42 ஆண்டுகள் தவித்தார்.

அறநிறுவனமான Pravasi Legal Cell இன் உதவியால் இப்போது அவர் மீட்கப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளுக்கு சென்ற பல ஊழியர்கள் அங்கு சிக்கி தவிப்பதாக அந்த அறநிறுவனம் கூறியது.

கோபாலன் வீடு திரும்பியது ,இது போன்று தவிக்கும் ஊழியர்களுக்கு நம்பிக்கயை கொடுக்கும் என்று அது கூறியது.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan