இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு தகுதி பெற்ற கார்லஸ் அல்கராஸ்..!!!

இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு தகுதி பெற்ற கார்லஸ் அல்கராஸ்..!!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இண்டியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டிகள் நேற்று நடைபெற்றன.

தொடக்கத்திலிருந்தே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய அல்கராஸ், பிரான்சிஸ்கோ செருண்டோலோவை 6-3, 7-6(7-4) என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

நாளை அரையிறுதியில் அல்கராஸ் பிரிட்டனின் கால் டிராப்பரை எதிர்கொள்கிறார்.

இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியின் முதல் ஆட்டத்தில், பெலாரசை சேர்ந்த அரினா சபலென்கா ரஷ்யாவைச் சேர்ந்த சாம்சோனோவாவை எதிர்கொண்டார்.

தொடக்கத்திலிருந்தே சிறப்பாக விளையாடிய சபலென்கா, 6-2 மற்றும் 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரினா சபலென்கா அரையிறுதியில் மேடிசன் கீஸுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.