ஆமைகளைச் சென்னையிலிருந்து இந்தோனேசியாவுக்கு கடத்த முயன்ற இந்தியர்!! சிங்கப்பூரில் சிக்கியது எப்படி?
இந்தியாவைச் சேர்ந்த Abdul Jaffar Haji Ali என்ற நபர் சாங்கி விமான நிலையத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.அவர் சட்டவிரோதமாக ஆமைகளை சாங்கி விமான நிலையம் வழியாக கொண்டு செல்ல முயன்றபோது அதிகாரிகளிடம் சிக்கினார்.
அவரிடம் இருந்து 58 இந்திய நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையிலிருந்து சிங்கப்பூர் வழி இந்தோனேஷியா தலைநகர் ஜக்கார்த்தாவிற்கு கொண்டு செல்ல முயன்றார்.
சாங்கி விமான நிலையத்தில் குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் அதிகாரிகள் அவரது பெட்டியைச் சோதனை செய்தனர்.
பெட்டியைத் திறந்து பார்த்தபோது ஆமைகள் துணியால் கட்டப்பட்டு இருந்ததைக் கண்டனர்.
இச்சம்பவம் குறித்து தேசிய பூங்காக் கழகத்திடம் தெரிவிக்கப்பட்டு,ஆமைகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
இந்திய நட்சத்திர ஆமை அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாகும்.
இந்திய நட்சத்திர ஆமைகளைக் சட்டவிரோதமாக கடத்த முயற்சி செய்ததற்காக அவருக்கு 16 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
Follow us on : click here