அமெரிக்காவில் $18.5 மில்லியனுக்கு விற்பனையான இந்திய ஓவியம்….!!!!

அமெரிக்காவில் $18.5 மில்லியனுக்கு விற்பனையான இந்திய ஓவியம்....!!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு இந்திய ஓவியம் 18.5 மில்லியன் வெள்ளிக்கு (13.8 மில்லியன் டாலர்) விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

14 அடி அகலமுள்ள இந்த ஓவியம் கடந்த வாரம் கிறிஸ்டிஸ் நிறுவனம் நடத்திய ஏலத்தில் விற்பனையானது.

புகழ்பெற்ற கலைஞர் எம்.எஃப். ஹுசைன் 1954 ஆம் ஆண்டு வரைந்த இந்த ஓவியம், இந்திய கிராம வாழ்க்கையின் பாரம்பரிய அம்சங்களின் தொகுப்பை சித்தரிக்கிறது.

இந்த ஓவியம் விவசாயம் மற்றும் குடும்பங்களில் பெண்களின் வேலை போன்ற பல காட்சிகளை சித்தரிக்கிறது.

1954 ஆம் ஆண்டில், உக்ரேனிய மருத்துவர் லியோன் எலியாஸ் வொலொடார்ஸ்கி இந்த ஓவியத்தை 395 வெள்ளிக்கு வாங்கினார்.

பின்னர் அது நார்வேயில் உள்ள ஒஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனையில் சுமார் 50 ஆண்டுகளாக காட்சிக்கு வைக்கப்பட்டது.

இந்த ஓவியம் ஹூசேனின் மறைவுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2013 ஆம் ஆண்டில் கிறிஸ்டியின் நிறுவனத்தால் வாங்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டு நடந்த கிறிஸ்டியின் ஏலங்களில், இந்திய கலைஞர் அம்ரிதா ஷெர்-கில் வரைந்த ஓவியம் $9.9 மில்லியனுக்கு விற்கப்பட்டது.