சாங்கி விமான நிலைய கடைகளில் கைவரிசை காட்டிய இந்தியர்!! முப்பதே நிமிடங்களில் கைது!

சாங்கி விமான நிலைய கடைகளில் கைவரிசை காட்டிய இந்தியர்!! முப்பதே நிமிடங்களில் கைது!

சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடைகளில் திருட்டு செயலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் 37 வயதுடைய இந்தியாவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்கிருக்கும் கடை ஒன்றில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி கைப்பை ஒன்று காணாமல் போனதாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து விசாரணையை தொடங்கிய காவல்துறை அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து அந்த நபரின் அடையாளங்களை கண்டறிந்தனர்.

அதன்பின் 30 நிமிடங்களில் விமான நிலையக் காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

இதனால் அவர் சிங்கப்பூரை விட்டு வெளியேற முயற்சித்ததும் தடுக்கப்பட்டது.

ஏற்கனவே அந்த நபர் மற்ற கடைகளிலிருந்து கைக்கடிகாரம்,சட்டைகள் , சாக்லேட்கள் என 1670 வெள்ளி மதிப்பிலான சில பொருட்களையும் திருடியதாக நம்பப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில் அது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் மீது இன்று(மார்ச் 7) நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்படும்.

அவர் திருடியதாக கூறப்படும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை ,அபராதம் அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம்.