Singapore Breaking News in Tamil

8 மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட இந்திய ஊழியர்!உரிய இழப்பீடு கிடைக்கும்!

நேற்று (ஜூன் 15) தஞ்சோங் பகார் வட்டாரத்தில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துகுள்ளானது. இந்த கட்டிட விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஊழியர் உயிரிழந்தார்.அவரது உடல் சுமார் 8 மணி நேரத்திற்கு பிறகு கட்டிட இடிபாடுகளில் கண்டெடுக்கப்பட்டது.

அவருக்கு வயது 20. அவரின் இறப்புக்கு Migrant Worker’s Centre தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது.

20 வயதுடைய அந்த ஊழியர் Aik Sun Demolition and Engineering நிறுவனத்தில் பணி புரிந்தார்.

Migrant worker’s centre இந்த விபத்து குறித்த தகவல்களைப் பெற நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளது. அதனைப் பற்றி Migrant Worker’s Centre தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

உயிரிழந்த ஊழியர் குடும்பத்தினரின் உடனடி தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும் கூறியது.

தொழிலாளர் இழப்பீடு சட்டத்தின்கீழ் இழப்பீடு கிடைக்கும். அதற்கு முன் வெளிநாட்டு ஊழியர் உதவி நிதியின்கீழ் தொகை வழங்கப்படும்.அதனை நிலையம் குறிப்பிட்டுள்ளது.