இந்தியா Vs நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி…!!! ஆடுகளம் குறித்து கேன் வில்லியம்சனின் கருத்து…!!!

இந்தியா Vs நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி...!!! ஆடுகளம் குறித்து கேன் வில்லியம்சனின் கருத்து...!!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா அணியும் நியூசிலாந்தும் அணியும் மோத உள்ளன. அரை இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அதேபோல் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதனால், இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது. துபாய் மைதானத்தில் போட்டி நடைபெறுவதால் இந்திய அணிக்கு கூடுதல் சாதகம் இருப்பதாக சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.ஏனென்றால் இந்திய அணி இதுவரை 4 போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடியுள்ளது.ஆனால் நியூசிலாந்து அணி பாகிஸ்தான் மற்றும் துபாயில் விளையாடியுள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்து ஜாம்பவான் கேன் வில்லியம்சன் இந்திய அணிக்கு இந்த சூழலில் ஒரு நன்மை இருப்பதாக எழுந்த விமர்சனம் குறித்து பேசியபோது, பாகிஸ்தான் மற்றும் துபாய் மைதானங்களுக்கும் பிட்சுகளுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடுகள் இருப்பதாகக் கூறினார்.இந்த சாம்பியன்ஸ் தொடர் முழுவதும் பிட்ச் ஒரே மாதிரியாக இல்லை.

இந்தியாவுக்கு எதிரான கடந்த ஆட்டம் எங்களுக்கு சற்று சிறந்த ஆடுகளமாக இருந்தது. இந்தியா ஒரு சிறந்த அணி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எனவே கடந்த ஆட்டத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களைக் கருத்தில் கொண்டு இறுதி ஆட்டத்தில் சிறப்பாகச் செயல்பட முயற்சிப்போம். இறுதிப் போட்டியில் எதுவும் நடக்கலாம். ஆனால் நிச்சயம் இது ஒரு சிறந்த ஆட்டமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இறுதிப் போட்டிக்கு முன் ஓய்வு

இந்திய அணி துபாயில் அனைத்து போட்டிகளையும் விளையாடுகிறது. இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று. மேலும் எங்களது கவனம் எதிரணி மற்றும் பிச்சில் மட்டுமே உள்ளது.

துபாய் மைதானத்தில் நாங்கள் ஒரு போட்டியை விளையாடியுள்ளோம்.அதிலிருந்து, ஆடுகளம் வித்தியாசமானது என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். எனவே நமக்குக் கிடைத்த நேர்மறையான விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு நாம் திட்டமிட வேண்டும். இறுதிப் போட்டிக்கு இன்னும் 2-3 நாட்கள் இருப்பதால், நாம் திட்டமிட்டு சிறப்பாகத் தயாராகலாம். மேலும் இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் மூன்று ஸ்பின்னர்களும் களம் இறங்குவதால் நிச்சயம் இறுதிப் போட்டி ஆனது விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிப் போட்டியில் விளையாட நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம் என்று அவர் கூறினார். இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 3 சுழற்பந்து வீச்சாளர்களை களமிறக்குவதால், அது இந்திய அணிக்கு சவால் விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.