இந்தியா வெற்றி அடைந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத சோயிப் அக்பர்!!
T20 உலகக் கோப்பை தொடரில் ஜூன் 9-ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஆடிய ஆட்டம் பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி பாகிஸ்தானின் முன்னாள் வீரர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சோயிப் அக்பர் விரக்தியுடன் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். டாஸ் இழந்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி பேட்டிங் செய்ய சாதகமாக இல்லை. ஆனால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைமையை மதிக்கவில்லை. இதன் காரணமாக ஆரம்பத்தில் ரன் எடுத்தாலும் கூட,மிக விரைவாக விக்கெட்டுகளை இழந்தது.
பவர் பிளேயில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்தது. மேலும் 10 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 80 ரன்களுக்கு மேல் எடுத்தது. ஆனால் இறுதி கட்டத்தில் வெறும் 39 ரன்கள் எடுத்து 19 ஓவரில் ஆல் அவுட் ஆனது.
பாகிஸ்தானின் பேட்டிங்கானது இந்தியாவின் மோசமான ஆட்டத்திற்கு சவால் விடும் வகையில் இருந்தது. அவர்களிடம் 8 விக்கெட்டுகள் இருந்தபோது 46 பந்துகளில் 46 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் தோற்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. போட்டியின் 15வது ஓவரில் பும்ராவின் பந்துவீச்சில் முகமது ரிஸ்வான் மிக மோசமான விளையாடினார். அவரது பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆட்டம் இழந்ததால், பாகிஸ்தான் சற்று சரிந்து கடைசி ஐந்து ஓவர்களில் போட்டியை முழுவதுமாக இழந்தது.
இதுபற்றி சோயப் அக்தர் கூறுகையில்,”நேற்றைய போட்டியில் பல விஷயங்கள் கேள்விக்குறியாக இருந்தது, குறிப்பாக பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஏன் அப்படி விளையாடினார்கள் என்று புரியவில்லை.பகார் ஜமான் பேட்டிங்கின் போது 46 பந்துகளில் வெற்றி பெற 46 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருக்க வேண்டியது என்று கூறினார்.
Follow us on : click here