Singapore News in Tamil

சிங்கப்பூரின் செயற்கைக்கோளை இந்தியா ஏவுகிறது!

வரும் 22-ஆம் தேதியன்று சிங்கப்பூருக்குச் சொந்தமான டெலியோஸ்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.

விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள் புவிக் கண்காணிப்புக்காகவும், பேரிடர் கண்காணிப்பு போன்ற பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்தப்படும்.

இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-55 என்று ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது.

இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் அதற்கு சம்பந்தப்பட்ட தரப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் முதல் ஏவுத்தளத்தில் இருந்து சிங்கப்பூர் செயற்கைக்கோள் ஏவப்படும். தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

ஏற்கனவே,கடந்த 2015-ஆம் ஆண்டு பிஎஸ்எல்வி சி-29 ராக்கெட் மூலம் டெலியோஸ்-1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.