இறுதிப் போட்டியில் இந்தியா!! அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆனந்த கண்ணீர்!!
ஜூன் 27-ஆம் தேதி கயானாவில் நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா,இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றிக்கு அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு அரை சதம் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தார்.முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 57 ரன்களும் சூரியகுமார் யாதவ் 47 ரன்களும் எடுத்தனர்.
மேலும் நடந்த போட்டியில் அதிக ரன்கள் எடுப்பார் என நினைத்த கோலி 9பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிவம் தூபே அதிக சிக்ஸர் கொடுப்பார் என்று நினைத்த இந்திய ரசிகர்களுக்கு அவர் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டம் இழந்தது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட இந்திய பந்துவீச்சாளர்கள் அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அபாரமாக பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் இந்திய அணி இங்கிலாந்து அணியை 103 ரன்களுக்குள் சுருட்டியது.
இதன் மூலம் இந்திய அணி மிக எளிதாக இறுதிப் போட்டிக்கு சென்றது.வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா தனது பங்களிப்பைச் செய்ததால், இங்கிலாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஹாரி ஃப்ரூக் 25 ரன்களும், கேப்டன் ஜோஸ் பட்லர் 23 ரன்களும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 21 ரன்களும் எடுத்து இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இந்தியா பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.இதற்கு முன் தோனி தலைமையிலான இந்திய அணி 2007ல் முதல்முறையாக டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றியது.அதன்பிறகு 2014ல் தோனி தலைமையிலான இந்திய அணி 2வது முறையாக பைனலுக்கு சென்றபோது 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோற்றது.2022 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இங்கிலாந்திடம் பெற்ற தோல்விக்கு இந்தியா அணி பதிலடி கொடுத்தது.இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
Follow us on : click here