சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் மாலத்தீவை வீழ்த்திய இந்தியா..!!

ஆசிய கோப்பை கால் பந்து தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு இந்திய அணியைத் தயார்படுத்துவதற்காக சர்வதேச நட்புறவு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, இந்தியா மற்றும் மாலத்தீவு அணிகளுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டி நேற்று இரவு மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் உள்ள நேரு மைதானத்தில் நடைபெற்றது.
உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களத்தில் இறங்கிய இந்திய வீரர்கள் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தினர்.
ராகுல் பெகே 34வது நிமிடத்திலும், லிஸ்டன் கோலக்கோ 66வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
76வது நிமிடத்தில், சக வீரர் கோலக்கோ பந்தை அனுபவ வீரர் சுனில் சேத்ரி தலையால் முட்டி பந்தை வலைக்குள் செலுத்தினார்.
இறுதியில், இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவை தோற்கடித்தது.
நவம்பர் 2023க்குப் பிறகு இந்திய அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதற்கு முன்னர் நடைபெற்ற 12 சர்வதேச போட்டிகளில் ஒன்றில் கூட இந்திய அணி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பை கால் பந்து தகுதிச் சுற்றில் இந்தியா அடுத்து 25 ஆம் தேதி அதே மைதானத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்ள உள்ளது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan