சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா பரவல்!! சுகாதாரத் துறையின் அறிவுரை!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா பரவல்!! சுகாதாரத்துறையின் அறிவுரை!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மக்கள் நோய் பரவல் காரணமாக கோவிட்-19 தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அமைச்சகத்தால் வலியுறுத்தப்பட்டது.சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விகிதம் சுமார் 50 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மருந்தகங்கள் தெரிவித்துள்ளது.


அதற்கு காரணம் அண்மை நாட்களாக கொரோன பரவல் சம்பவங்கள் அதிகரித்து வருவதே காரணமாக பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் பள்ளி விடுமுறை காலம் என்பதால் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வோர் எண்ணிக்கையை விட சளிக்காய்ச்சல் தடுப்பூசி போட்டு கொள்வோர் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது.

கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வோர் எண்ணிக்கை உயர்ந்து வருவதற்கு கிருமி பரவல் மற்றும் நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதும் கூட காரணமாக இருக்கலாம். பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதால்
கடந்த சில நாட்களாகவே நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் மக்கள் அனைவரையும் கோவிட்-19 தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும் நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கவும், கிருமி பரவலை கட்டுப்படுத்தும் நோக்கோடு அரசு செயல்படுவதாக தெரிவித்திருந்தார்.எனவே மக்கள் கிருமி பரவலை கருத்தில் கொண்டு நோயினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தொடக்க கால கொரோனா பரவல் மக்களிடையே பெரும் பாதிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. ஆனால் தற்போது மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு தடுப்பூசிகளை எடுத்துக் கொள்வதால் உயிரிழப்பு சதவீதம் கணிசமாக குறைந்துள்ளது. நோயின் தீவிரமும் சற்று குறைந்து காணப்படுவதால் மக்கள் கவலையின்றி நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.