சிங்கப்பூரில் அதிகரித்து வரும் காப்பீடு வாங்குவோர்களின் எண்ணிக்கை!!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் காப்பீடு வாங்குவோர்களின் எண்ணிக்கை!!

2024 ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டில் ஆயுள் காப்புறுதிகளை சிங்கப்பூரர்கள் கூடுதலாக வாங்கியுள்ளதாக சிங்கப்பூர் ஆயுள் காப்புறுதி சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது 30 சதவீதம் பேர் கூடுதலாக புதிய காப்புறுதிகளை வாங்கியுள்ளனர்.

வெளிநாட்டு நிறுவனங்கள் சிங்கப்பூரில் தடம் பதிப்பதற்கு சிங்கப்பூரர்களின் ஆயுள் காப்புறுதி விகிதம் அதிகரித்து வருவது ஒரு காரணமாக இருக்கலாம் என நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.


2.86 பில்லியன் பணம் கடந்த 6 மாதத்தில் புதிய காப்புறுதிச் சந்தாக்களிலிருந்து வாங்கப்பட்டது

கடந்த 6 மாதங்களில் மொத்தம் 2.86 பில்லியன் வெள்ளி புதிய காப்பீடு சந்தாக்கள் மூலம் பெறப்பட்டது.

இந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, மொத்தம் 71000 சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் ஒருங்கிணைந்த ஷீல்டு திட்டங்களைப் புதிதாக வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.