உணவகங்களில் அதிகரிக்கும் பாதுகாப்பு குறைபாடு ...!! அதிகாரிகள் திடீர் சோதனை...!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் உணவு பாதுகாப்பு அமைச்சகமானது உரிமம் பெற்ற நிறுவனங்கள் தொடர்ந்து ஒழுங்குமுறை தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காக SFA தொடர்ந்து ஆய்வுகள் மற்றும் தணிக்கைகளை நடத்துகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மத்திய உணவகங்களில் அதன் சோதனையை தீவிர படுத்தியது.
உணவுப் பாதுகாப்பு அபாயங்களை குறைக்க SFA இன் இணக்க மேலாண்மைப் பிரிவின் சுகாதார அதிகாரிகளால் வருடத்திற்கு ஒருமுறை உணவக ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்த ஆய்வுகள் ஆண்டின் எந்த நேரத்திலும் நிகழலாம். உணவகங்களுக்கு எந்தவித
முன்அறிவிப்பும் இன்றி திடீரென ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
இம்மாதிரியான நேரடி தகவல் பகுப்பாய்வு நடைமுறையானது உணவகம் பொதுவாக எவ்வளவு சுகாதாரமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும்.
ஆனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிக உணவுப் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன.
உணவு பாதுகாப்பு அமைச்சகம் காக்கி புக்கிட்டில் உள்ள ஒரு உணவகத்தில் சோதனை நடத்தினர்.
சோதனை இட்டதில் சமையலறை பகுதியில் கரப்பான் பூச்சிகள் மற்றும் எலிகள் இருந்ததாக கூறப்பட்டது.
மேலும் சமையல் செய்யும் போது ஊழியர்கள் முகமூடி அணியாதது உள்ளிட்ட பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டன.
இது தொடர்பாக அங்கு விசாரணை நடந்து வருகிறது.
சுகாதார பாதுகாப்பு இல்லாமல் இருந்த குற்றம் உறுதிசெய்யப்பட்டால், அதன் தீவிரத்தைப் பொறுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு டீமெரிட் புள்ளிகள் விதிக்கப்படும்.
ஒரு வருடத்தில் 12 டீமெரிட் புள்ளிகளுக்கு மேல் பெறும் நிறுவனத்தின் உரிமமானது முடக்கப்படலாம்.
Follow us on : click here