குழந்தைகளிடையே அதிகரிக்கும் உணவு ஒவ்வாமை பிரச்சனை..!! விவரங்களை திரட்டும் ஆய்வு…!!!

குழந்தைகளிடையே அதிகரிக்கும் உணவு ஒவ்வாமை பிரச்சனை..!! விவரங்களை திரட்டும் ஆய்வு...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் குழந்தைகளின் உணவு ஒவ்வாமை குறித்து புதிய ஆய்வு நடத்தப்பட உள்ளது.

2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், 1 முதல் 3 சதவீத சிறு குழந்தைகள் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளது கவனத்திற்கு வந்தது.

அவர்கள் ஒன்றரை வயது முதல் 4 வயது வரை உள்ளவர்கள்.

உணவு ஒவ்வாமை ஆனது இடத்திற்கு இடம் நாம் வாழும் சூழ்நிலையை பொறுத்து அமையும்.பெரும்பாலான குழந்தைகளை ஆய்வு நடத்தியதில் முட்டை ,பசுவின் பால்,வேர்க்கடலை,மரக்கொட்டைகள் முதலியவற்றில் ஒவ்வாமை இருப்பதாக காட்டப்பட்டுள்ளது.

உணவு ஒவ்வாமையை சமாளிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன.

தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை,கேகே மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஏற்கனவே இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

அவர்களுக்கு ஆதரவாகவே அமைப்பின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக மூத்த பிரதி அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹி டிங் ரூ, சிங்கப்பூரில் உணவு ஒவ்வாமை அதிகரிப்பு குறித்து மன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த டாக்டர் ஜனில், ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் புரிதலற்ற அல்லது தீர்க்கமான ஒரு முடிவை எடுப்பது சரியாக இருக்காது என்று கூறினார்.

உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இப்போது அறியப்படுகிறது.

மக்கள் தொகை கணிசமாக அதிகரித்து வருவதையும் டாக்டர் ஜனில் சுட்டிக்காட்டினார்.