அண்மை ஆண்டுகளில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவை!! சிங்கப்பூரில் புதிய நிலையம்!!

PacificLight Power எரிசக்தி நிறுவனத்திற்கு மின்சாரம் உற்பத்தி செய்ய புதிய நிலையத்தை கட்டவும் அதனை செயல்படுத்தவும் ஒப்புதலை சிங்கப்பூரின் எரிசக்தி சந்தை ஆணையம் வழங்கியுள்ளது.

புதிதாக கட்டவிருக்கும் மின் நிலையம் 2029 ஆம் ஆண்டுக்குள் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மின் நிலையம் முழுமையாக கட்டி முடித்து செயல்பாட்டுக்கு வரும்போது 600 மெகாவாட் எரிசக்தியை உற்பத்தி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனால் சுமார் 860000 நான்கு அறைகள் கொண்ட வீடுகள் பயன்பெறும் என்று சிங்கப்பூர் மின்சார வாரியம் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் எரிசக்தி தேவை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதால் புதிய நிலையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் மின்சார உற்பத்தியை தொடர்ந்து அதிகரிப்பதற்கும் சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.