சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கோவிட்-19 சம்பவங்கள்!! மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்படுமா?

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கோவிட்-19 சம்பவங்கள்!! மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்படுமா?

சிங்கப்பூரில் மே 5-ஆம் தேதிக்கும் 11-ஆம் தேதிக்கும் இடையே சுமார் 26000 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது முந்தைய வாரத்தில் பதிவானதை விட ஒரு மடங்கு அதிகம்.

கோவிட்-19 தொற்றுப் பாதிப்பு சிங்கப்பூரில் உயரந்து வருவதாக சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறினார்.

அடுத்து வரும் 2 முதல் 4 வாரங்களில் நோய்த்தொற்று சம்பவங்கள் உச்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

சூழலை கருத்தில் கொண்டு போதுமான படுக்கைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

அவசரமற்ற ஆபரேஷன்களை ஒத்தி வைக்குமாறும் தகுதியுள்ள நோயாளிகளை இடைக்காலப் பராமரிப்புச் சேவை இடத்திற்கு அனுப்பவும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை தினசரி சராசரியாக கிட்டத்தட்ட 180 லிருந்து 250 ஆக உயர்ந்துள்ளது.

நோய் பரவலில் இருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளுமாறு பொதுமக்களை சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

நோய் பரவலை தடுக்க பொறுப்புடன் செயல்படுமாறு சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.