தெற்காசியாவைக் குறித்து உணவு வேளாண்மைப்பும், ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மற்ற அமைப்புகளும் சேர்ந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 2021-ஆம் ஆண்டில் தெற்காசியாவில் 10 ல் 8 க்கும் மேற்பட்டோர் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் இருக்கின்றனர். உணவு பற்றாக்குறையால் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் உணவு இன்றி பசிக் கொடுமையால் வாடுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இத்தகையச் சூழல் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்தும், அதற்கான பாதுகாப்பின்மை ஏற்படும்போது மட்டுமே உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.
உலக அளவில் உணவு பாதுகாப்பின்மை 2021-ஆம் ஆண்டில் 29 விழுக்காட்டிற்கு மேல் அதிகரித்துள்ளது. உணவு பாதுகாப்பின்மை 2014- ஆம் ஆண்டில் 21 விழுக்காடாக இருந்தது. அதன்பின் 2021-ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது.
Covid-19 கிருமி பரவல் காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் வேலை இழப்பிற்கும் ஆளானார்கள். அதன் பின் பெரிய சவால்களை எதிர்நோக்கினர்.இது முக்கிய காரணமாக அமைந்தது.
உணவு,எரிச்சக்தி, உரங்கள் முதலியவற்றை விலை மாற்றம் ஏற்பட்டது. இதன் விலைகள் கணிசமாக அதிகரித்தது. இதற்குக் காரணம் உக்ரைன் போர். இதனால் பல மில்லியன் கணக்கானோர் உணவு இன்றி பசியால் வாடினர்.
2019-லிருந்து 2021-ஆம் ஆண்டு கிருமி பரவல் காரணமாக தாய்லாந்து சுற்றுலாத்துறை, உற்பத்தித்துறை முதலியவற்றில் 10-இல் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து 2018-ஆம் ஆண்டு வரை வறுமை விழுக்காடு அதிகரித்துள்ளது. 2.6 விழுக்காடு அதிகரித்து இருந்ததாக உலக வங்கி தெரிவித்தது.