அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து MediShield Life திட்டத்தின்கீழ் பெறப்படும் வருடாந்திர தொகை உயர்வு!

Medishield Life திட்டத்தின்கீழ் புற்றுநோய் சிகிச்சை மருந்துக்குக் கோரக்கூடிய வருடாந்திர தொகை உயர்த்தப்படுவதாக சுகாதார அமைச்சகம் அறிவித்தது. அதாவது 1,200 வெள்ளியிலிருந்து 3,600 வெள்ளிக்கு உயர்த்தப்படுகிறது.

அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும்.நடப்புக்கு வரும் அதே நாளிலிருந்து ஒருங்கிணைந்த மருத்துவக் காப்புறுதி திட்டமும் மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவித்தது.

அதாவது புற்றுநோய் மருந்துப் பட்டியலில் உள்ள சிகிச்சைகளை உள்ளடக்கும் வகையில் இருக்கும் காப்புறுதி மாற்றி அமைக்கப்படும்.

இந்த மாற்றம் புதிய காப்புறுதி வாங்கியபின் அல்லது புதுப்பிக்கப்பட்ட பிறகு மாற்றம் நடைமுறைக்கு வரும்.

ஆண்டுதோறும் புற்றுநோய் உள்ளவர்கள் வெளிநோயாளிச் சேவைகளுக்காக MediShield Life திட்டத்தின்கீழ் 1,200 வெள்ளிப் பெறலாம்.

அதே போல் Medisave எனும் மருத்துவச் சேமிப்புக் கணக்கிலிருந்து 600 வெள்ளி பெறலாம்.

இத்தொகையில் ரத்தப் பரிசோதனை, ஸ்கேன்,மருத்துவர் ஆலோசனை,மருந்து முதலியவைகளும் அடங்கும்.

அமைச்சகத்திடம் சில நோயாளிகளுக்கு இத்தொகை போதாது என மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதனை அமைச்சகம் பரிசீலித்தது. பரிசீலித்த பிறகு, அதன் வரம்பை உயர்த்தி உள்ளது.

திட்டத்தின்கீழ் கோரக்கூடிய தொகை 3,600 வெள்ளிக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது.

இதனை அமைச்சகம் அறிவித்தது.

Medisave கணக்கிலிருந்து பெறப்படும் தொகை உச்ச வரம்பில் மாற்றம் இல்லை என்றும் தெரிவித்தது.