சாலை விதிமீறல்களால் அதிகரிக்கும் விபத்து…!!!

சாலை விதிமீறல்களால் அதிகரிக்கும் விபத்து...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் பாதியில் 4,702 பேர் வாகன விபத்துக்களில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

போக்குவரத்து துறை இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதில் 73 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ளவர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்காமல் வேக விதி மீறல்களில் ஈடுபட்டவர்களும் உண்டு.

அதில் 77,000 க்கும் மேற்பட்டவர்கள் வேகமாக வாகனத்தை ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

முந்தைய ஆண்டுடன் (2023) ஒப்பிடும்போது இது 2.4 சதவீதம் அதிகமாகும்.

2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 21 சதவீதம் அதிகமாகும்.

இருசக்கர வாகன ஓட்டிகளும் அவர்களுடன் பயணம் செய்தவர்களும் விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

விபத்தில் பலியானவர்களில் 60 சதவீதம் பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள்.

மேலும் வயதான பாதசாரிகள் விபத்துக்களில் சிக்குவது கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் விபத்துகளும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதாக தெரிவித்தது.

இந்த விபத்துகள் 2022 இன் முற்பாதியில் 70 ஆகவும்,2023 இல் 88 ஆகவும் 2024 இல் 96 ஆகவும் அதிகரித்துள்ளது.

2024 ஏற்பட்ட சாலை விபத்தில் ஒன்பது பேர் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.அந்த வகையில் சிவப்பு விளக்கு கேமராக்களை அதிக எண்ணிக்கையில் பொருத்த திட்டமிட்டுள்ளது.

சாலை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.