சிக்கிமில் இடைவிடாமல் பெய்த கனமழை!! சிக்கி தவித்த 2000 சுற்றுலா பயணிகள்!!
இந்தியா: ஜூன் 14ஆம் தேதி(இன்று) இந்தியாவில் உள்ள இமயமலை மாநிலமான சிக்கிமில் அதிக மழை பெய்தது.
இடைவிடாமல் தொடர்ந்து பெய்த கனமழையால் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இயற்கை பேரிடரில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 2000 சுற்றுலா பயணிகள் சிக்கியதாக
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் உள்ள தப்லேஜங் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவு ஏற்பட்டதில் வீடு ஒன்று அடித்து செல்லப்பட்டது.மேலும் வீட்டில் உறங்கி கொண்டிருந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.
மாங்கன் மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டது. சுமார் 36 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்ததால், சாலையில் பல இடங்கள் சேதம் அடைந்துள்ளதாக என்று மாவட்ட ஆட்சியர் ஹேம் குமார் செத்ரி கூறினார்.
சுற்றுலா பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களில் 11 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.
மேலும் இது மிகவும் முக்கியமான சுற்றுலா தளமாக உள்ளது. இது காலநிலை காரணமாக ஏற்படும் இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ள வேண்டி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
மழையினால் சுமார் 50 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும்,மேலும் அவர்களை நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Follow us on : click here