கோலாலம்பூர்- சிங்கப்பூர் அதிவிரைவு ரயில் திட்டத்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
மலேசியா உச்ச நீதிமன்றம் திட்டத்தை ரத்து செய்ததற்கான தற்காப்பு ஆவணங்களைச் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டது.
தற்காப்பு ஆவணங்களை மலேசிய முன்னாள் பிரதமர்களான Mohathir Mohamed,Muhyiddin Yassin உள்ளிட்டு ஐந்து பேர் தற்காப்பு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டது.
மலேசிய ஊடகங்களில் முன்னாள் பிரதமரின் பொருளியல் பிரிவு அமைச்சர் Mustapa Mohamed, முன்னாள் போக்குவரத்து அமைச்சர் Wee kong siong மற்றும் மலேசிய அரசாங்கம் ஆகிய ஐந்து தரப்பினரும் விரைவில் தற்காப்பு ஆவணங்களைச் சமர்ப்பிப்பர் என்று குறிப்பிட்டு இருந்தது.
Mohd Hatta Sanuri என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். பொது நிர்வாகத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், கவனக்குறைவாக அதிவேக ரயில் திட்டத்தை ரத்து செய்ததற்காகவும் அதன் அடிப்படையில் வழக்கு தொடுத்திருந்தார்.
இவர் தற்காப்பு ஆவணங்களுக்கு அடுத்த மாதம் 28-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.இந்த விசாரணை அடுத்த மாதம் 30- ஆம் தேதி தொடரும்.