Singapore Breaking News in Tamil

சினிமாவில் ‘கை தூக்கி விட்ட வரை, கை கழுவி விட்ட சூர்யா’… நன்றி மறவாத ‘விஜய் சேதுபதி’…

பிரபல நடிகரான சிவகுமாரின் மகன் சூர்யா தனது இளம் வயது முதல் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தாலும், முதலில் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்த அவர் ‘நந்தா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹிட் அடித்தார். அதற்கு பிறகு பிதாமகன், பேரழகன் என்று அவர் தேர்ந்தெடுத்து நடித்த ஒவ்வொரு படங்களும் அவரை சினிமாவின் உச்சத்தில் கொண்டு சென்றன.

இதன்பிறகு தொடர்ச்சியாக ஹிட் படங்கள் கொடுத்த அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார். அதன் பிறகு நடிகை ஜோதிகாவை திருமணம் செய்த பிறகு, இரண்டு குழந்தைகளோடு திருமண வாழ்விலும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்.

சூர்யாவின் வளர்ச்சிக்கு பல இயக்குனர்கள் காரணமாக இருந்தாலும், குறிப்பாக இயக்குனர் கே வி ஆனந்த், அவரை வைத்து ஐயன், மாற்றான் மற்றும் காப்பான் போன்ற படங்களை இயக்கியுள்ளார். அதில் அயன் படம் நடிகர் சூர்யாவிற்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு படமாகும்.

இயக்குனர் கே வி ஆனந்த் கடந்த 2021 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் அவருடைய மகளுடைய திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கின்றது. அந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் மலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக ஜீவா விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்து கொண்டனர். ஆனால் பலரும் எதிர்பார்த்து இருந்த சூர்யா அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், வெளிநாட்டில் குடும்பத்தினருடன் விடுமுறையினை ஜாலியாக கழித்து வரும் சூர்யா ஏன் அவரின் நெருக்கமான இயக்குனரின் மகளின் திருமணத்திற்கு வரவில்லை? ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு மவுஸ் அவ்வளவுதானா என்று கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி பல படங்களில் பிசியாக இருந்தாலும் அவரால் முடிந்த ஒன்று ஏன் சூர்யாவால் முடியவில்லை என்று கேள்விகளை கொடுத்து வருகின்றனர். நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் பல பேரின் கல்விக்கு உதவி வருகின்றார். இந்நிலையில் அவருக்கு சினிமாவில் மட்டுமல்லாமல் சமூகத்திலும் ஒரு நல்ல பெயர் இருக்கின்றது.

அவர் திருமணத்திற்கு வராமல் இருப்பதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம் என்று அவரது நலம் விரும்புகள் சிலர் அவருக்கு துணையாக இருந்தாலும், அவர் திருமணத்திற்கு வந்திருக்கலாம் என்று சிலர் கிசுகிசுக்கவும் செய்கின்றனர்.