தஞ்சையில் வி.சி.க வினர் சாலை மறியல் செய்ய முற்பட்டதால் பரபரப்பு!!
நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்டம் மலையூர் கடைத்தெருவில் சாதிய வன்கொடுமைகளை கண்டித்து விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட வடக்கு மாவட்ட செயலாளர் இளமதி அசோகன் தஞ்சை புதுகை மண்டல செயலாளர் சதா சிவகுமார் மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மேடை அருகே நின்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதில் வடக்கு மாவட்ட செயலாளர் இளமதி அசோகன் சேலையில் தீ மல மல வென பரவியது. பின்பு அங்கிருந்த விசிக உறுப்பினர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து மாவட்ட செயலாளரை மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதை கண்டித்து நேற்று கந்தர்வகோட்டை மற்றும் புதுக்கோட்டை பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல் செய்தனர் .இதனைத் தொடர்ந்து இன்று தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் இடிமுரசு இலக்கணம் தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஒன்று திரண்டு தஞ்சை ரயிலடி அருகே சாலை மறியல் செய்ய முற்பட்டனர் .இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு இந்த இடத்திற்கு வருகை தந்த காவல் துறையினர் விடுதலை சிறுத்தை கட்சியினரை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட செயலாளர் தஞ்சை புதுக்கோட்டை பகுதிகளில் தொடர்ச்சியாக சாதிய வன்மத்தோடு பதாகைகளை கிழிப்பது, வாகனங்கள் மீது கல் எடுத்து அடிப்பது, ஒன்றிய செயலாளர் மீது கொலை மிரட்டல் விடுவது போன்ற செயல்கள் தொடர்ந்து வந்த வண்ணமாகவே உள்ளது .இது சம்பந்தமாக பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறையினருக்கும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .ஆகையால் இந்த டெல்டா மாவட்டத்தை வன்கொடுமை நிறைந்த மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினார்.
இந்த நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் வீரன் வெற்றிவேந்தன், முன்னாள் மாவட்ட செயலாளர் சொக்கர் ரவி, மாவட்ட பொருளாளர் தங்க முருகானந்தம், ஒன்றிய செயலாளர்கள், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் அரங்க குரு, தஞ்சை மைய ஒன்றிய செயலாளர்மறியல் வினோத், ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவாஜி, முன்னாள் மாநகர செயலாளர் தமிழ் முதல்வன், சமூக ஊடக அமைப்பாளர் ரகு ,இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் தங்க சுரேந்தர், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஒன்றிய துணை அமைப்பாளர் விளார் சிறுத்தை சிவா, முன்னாள் ஒன்றிய அமைப்பாளர் தலித் பிரபாகரன், முன்னாள் செய்தி தொடர்பாளர் நெலின், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜாத்தி, செயலாளர் பால்ராஜ், மாநகர பொறுப்பாளர் புதுச்சேரி அருன், நாஞ்சிக்கோட்டை கலை, விளார் முகாம் சிலம்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.