சிங்கப்பூரில் பிப்ரவரி 15-ஆம் தேதி (நாளை) முழுமைத் தற்காப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
சிங்கப்பூர் முழுவதும் முழுமைத் தற்காப்பு தினத்தன்று பொது எச்சரிக்கை முறையில் ஒலி எழுப்பப்படும்.
SGsecure செயலியைப் பதிவிறக்கம் செய்தவர்களின் கைத்தொலைபேசியில் அதனைக் கேட்கலாம்.இந்த ஒலி 20 வினாடிக்குள் நிறுத்தப்படும்.
சிங்கப்பூரைப் பாதுகாக்கவும் அதன் அரசு உரிமையை மேலும் வலுப்படுத்தவும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
தீவெங்கும் ஒவ்வொரு ஆண்டும் மாலை 6.20 மணிக்கு பொது எச்சரிக்கை முறையின் ஒலி எழுப்பப்படும்.
இந்த தினம் சிங்கப்பூர் மீள்திறன் கொண்ட சமுதாயமாக ஒன்றிணைந்து பங்காற்ற வேண்டும் என்பதை இது நினைவூட்டும். இவ்வாறு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.