சிங்கப்பூரில் கண் அரிப்பு எனும் Conjunctivitis நோய் அல்லது கிருமி தொற்றுகள் அதிகரித்துள்ளது.
இந்த காலகட்டத்தை கடந்த 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்த்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கண் அரிப்பால் கடந்த 2022-ஆம் ஆண்டுடன் முதல் ஒன்றரை மாதங்களுடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இவ்வாண்டின் ஜனவரி முதல் இதுவரை 50 விழுக்காடு கூடியதாக மருந்தகங்கள் கூறியது.
கண்ணைப் பாதிக்கும் கிருமி இருமல் மூலம் பரவக்கூடும்.தற்போது முக கவசம் அணியும் நடைமுறை தளர்த்தப்பட்டதால் கண் அரிப்பு தொற்று அதிகரித்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கண் சிவந்து போவது மட்டுமல்லாமல் கண் இமைகளில் வீக்கம் ஏற்படலாம். லேசான காய்ச்சலும் இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறினார்கள்.
பலத்துறை மருந்தகங்களுக்கு கண் அரிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிருமி பரவலுக்கு முந்தைய காலகட்டத்தைப் போல் இருக்கிறது.
இதனைத் தேசியச் சுகாதாரப் பராமரிப்பு குழு கூறியது. வாரம் இரண்டு கண் அரிப்பு நோயாளிகளைப் பரிசோதிக்கும் மருந்தகங்கள் ஆனால் தற்போது ஐந்து நோயாளிகளைப் பார்க்கிறது.
எப்போதும் கைகளைக் கழுவ வேண்டும்.சுகாதாரப் பழக்கங்களைக் கடைப்பிடிக்கும்படி மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர்.