பீஷான், சாங்கி விமான நிலையம்,தங்ளின் ஆகிய இடங்களில் உள்ள Mindchamps பாலர்பள்ளிகளைச் சேர்ந்தவர்களுக்கு வயிற்று கோளாறு பிரச்சனை ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.Mindchamps பாலர் பள்ளிகளைச் சேர்ந்த 6 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
10 ஊழியர்களுக்கும்,76 பிள்ளைகளுக்கும் வயிற்றுக் கோளாறு அறிகுறிகள் ஏற்பட்டன.
Nosh Cuisine உணவைச் சாப்பிட்ட பிறகு,அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாதம் 17-ஆம் தேதிக்கும் 29-ஆம் தேதிக்கும் இடையில் அந்நிறுவனம் தயாரித்த உணவைச் சாப்பிட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரின் உடல்நிலை சீராக உள்ளது.
சுகாதார அமைச்சகம்,சிங்கப்பூர் உணவு அமைப்பு,ஆரம்பகாலக் குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைப்பு அறிக்கை வெளியிட்டது. அதில் அவர்கள் உடல்நிலை சீராக இருப்பதைக் குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூர் உணவு அமைப்பு Nosh Cuisine உணவு நிறுவனத்தின் செயல்பாடுகளை நேற்றிலிருந்து (மே 30) மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.