சிங்கப்பூரில் மதுபோதையில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையின் மருத்துவரை தாக்கிய நபர்!!

சிங்கப்பூரில் மதுபோதையில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையின் மருத்துவரை தாக்கிய நபர்!!

சிங்கப்பூரில் மதுபோதையில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மருத்துவரை தாக்கிய 36 வயதான நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த சம்பவம் கடந்த ஆண்டு மே மாதம் நடந்தது.

அந்த நபர் மேரிமவுண்டில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு அருகில் மயங்கிய நிலையில் கிடந்தார்.

அங்கு வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆம்புலன்ஸ் குழுவினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

அவர்களுக்கு ஒத்துழைக்க மறுத்த அந்த நபரை இரண்டு காவல்துறையினர் சமாதானப்படுத்தி ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவர் ஒருவரின் கழுத்தை அவர் இறுக்கிப் பிடித்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த நபரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்த மருத்துவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக அவர்கள் கூறினர்.

அந்த நபருக்கு ஏப்ரல் 3ஆம் தேதி அன்று இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.