சிங்கப்பூரில் உள்ள குடும்பங்களுக்குவழங்கப்படும் U-Save சலுகை காலாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும்.
இம்முறை தகுதிபெறும் குடும்பங்களுக்கு அவை இரண்டு மடங்கு கிடைக்க உள்ளது.
அவை வழக்கமாக கிடைக்கும் சலுகைகள் போன்று U-Save சலுகை கிடைக்க உள்ளதாக கூறப்பட்டது.
அடுத்த மாதம் சிங்கப்பூர் குடும்பங்களுக்கு பொருட்சேவை வரி பற்றுச்சீட்டுகள் மூலம் U-Save சலுகை,பாமரிப்புக் கட்டண கழிவுகளும் வழங்கப்படும்.
அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 720 மில்லியன் வெள்ளி. இது இவ்வாண்டின் மொத்த மதிப்பு.
அவை ஓரறை மற்றும் ஈரறை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு கிட்டத்தட்ட 8 முதல் 10 மாத கால பயனீட்டு கட்டணங்களுக்கு நிகர்.
மூன்றறை மற்றும் நான்கறை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு அது சுமார் 4 முதல் 6 மாதங்கள் கட்டணங்களுக்கு சமம்.
ஜூலை மாதம் சேவை, பராமரிப்பு கட்டணத்தில் தகுதிபெறும் குடும்பங்களுக்கு அரை மாதத்திலிருந்து ஒரு மாதம் வரை சலுகை வழங்கப்படும்.