ஜெர்மனியில் விரைவு ரயிலுடன் லாரி மோதியதில் ஒருவர் பலி..!!!

ஜெர்மனியில் விரைவு ரயிலுடன் லாரி மோதியதில் ஒருவர் பலி..!!!

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் விரைவு ரயிலும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் 25 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் 6 பேர் பலத்த காயம் அடைந்ததாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று (பிப்ரவரி 11)ஜெர்மன் நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தானது மன் நகருக்குச் செல்லும் பாதையில் உள்ள தண்டவாளச் சந்திப்பில் நடந்துள்ளது.

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (ICE) ரயில் வடமேற்கு நகரமான பிரேமனை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

அப்போது இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலானது ஹம்பர்க்கின் ரோன்பர்க் மாவட்டத்தில் உள்ள ஒரு தண்டவாளச் சந்திப்பில் ஏற்றப்பட்ட டிரக் மீது மோதியது.

இந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் சுமார் 300 பேர் பயணம் செய்தனர்.

விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.