பிரேசிலில் உயிரிழந்த குழந்தை இறுதிச் சடங்கில் கைகளை அசைத்ததால் பரபரப்பு!!
பிரேசிலில் உயிரிழந்ததாக உறுதிசெய்யப்பட்ட 8 மாத குழந்தை ஒன்று அதன் இறுதிச் சடங்கில் விரல்களை அசைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொற்று நோயால் பாதிக்கப்பட்ட கியாரா இந்த மாதம் 19 ஆம் தேதி (அக்டோபர் 2024) மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கியாராவால் மூச்சு விட முடியவில்லை.
மேலும் அந்தக் குழந்தையின் இதயத்துடிப்பும் நின்றுவிட்டது
சிறிது நேரத்தில் கியாரா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கில் உறவினர் ஒருவர் அவரது கையைத் தொட்டபோது, கியாரா பதிலுக்கு தனது விரல்களை அசைத்ததாக கூறப்படுகிறது.
அவரது உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் குடும்பத்தினர் கியாராவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவ ஊழியர்கள் கியாராவைக் காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் அவர்களின் முயற்சி பயனளிக்கவில்லை.
கியாராவின் இதயத்துடிப்பு மீண்டும் நின்றுவிட்டது.
இந்த முறை கியாராவின் மரணம் உறுதி செய்யப்பட்டது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0