முக்கிய சந்தைகளோடு சிங்கப்பூர் வர்த்தகங்களையும், சிங்கப்பூரர்களையும் இன்னும் சுலபமாக இணைப்பதற்கு இருதரப்பு, பல தரப்பு நிகழ் நேர தொடர்புகள் உதவியாக இருக்கும்.
எல்லைத்தாண்டி கட்டணம் செலுத்தும் வசதியை மேம்படுத்த வேண்டும்.
இதனை பிரதமர் அலுவலகம் கூறி உள்ளது.
ஆசிய நாடுகளை அதில் ஈடுபடுத்த வேண்டும்.
இருதரப்பு, பலதரப்பு நிகழ்நேர தொடர்புகளை அமைக்க வேண்டும்.
ஆய்வு மேம்பாடு, புத்தாக்கம் ஆகிய இரண்டிலுமே உலக அளவிலும், ஆசிய அளவிலும் சிங்கப்பூர் சிறந்த நிலையைப் பெற்றுள்ளது.
அந்த நிலையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் தேசிய ஆய்வு நிறுவனம் சொன்னது.
முக்கியமாக உலக முன்னணி திறமையானவர்களை வரவேற்க வேண்டும். அதே சமயத்தில் ஆய்வுகளை செய்வதற்கு சிங்கப்பூர் ஆய்வாளர் அணியை உருவாக்குவதும் முக்கியம் என தேசிய ஆய்வு நிறுவனம் கூறியது.