சிங்கப்பூருக்கு வேலைக்கு வருபவர்களில் சிலர் அங்கு நடைமுறையில் இருக்கும் சட்ட திட்டங்கள், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி அறியாமல் வந்து தவறுகளை செய்வதுண்டு. இந்த பதிவு அவர்களுக்கானது.
நீங்கள் சிங்கப்பூரில் அறியாமல் செய்யும் தவறுக்கு சில பின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும். சிங்கப்பூரில் சட்ட திட்டங்கள் கடுமையாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். நீங்கள் அறியாமல் செய்த சிறிய தவறுக்கு கூட பெரிய தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
ஒரு சிலர் சிங்கப்பூரில் சட்டதிட்டங்கள் பற்றி தெரியாமல் தவறு செய்து சிக்கி கொள்கின்றனர். நீங்கள் அறியாமல் செய்த அந்த தவறுக்கு சிறை தண்டனை கிடைக்க கூட வாய்ப்புள்ளது.
இந்தப் பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை முழுமையாக படியுங்கள்!! உங்களுக்கு தெரியாததையும் தெரிந்து கொள்ளுங்கள்!!.
- முறையற்ற முறையில் தங்கள் நாட்டிற்கு பணம் அனுப்புவது:
சிங்கப்பூரில் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை உங்கள் தாய்நாட்டிற்கு அனுப்ப சரியான வழிமுறைகள் நிறைய இருக்கிறது. ஓர் உதாரணமாக,Western Union Bank, அங்கீகரிக்கப்பட்ட வங்கி செயலிகள்(Apps),… இதன் மூலமாக மட்டுமே பணத்தை தாய்நாட்டிற்கு அனுப்ப வேண்டும். ஆனால் சிலர் முறையற்ற முறையில் பணத்தை அனுப்புகிறார்கள். நீங்கள் முறையற்ற முறையில் பணத்தை அனுப்பி உள்ளீர்கள் என்று சிங்கப்பூர் அரசாங்கம் கண்டுபிடித்தால் அதற்கு தக்க தண்டனை கிடைக்கும். முறையற்ற முறையில் பணம் அனுப்புவதால் அதற்கு வரி செலுத்தாமலும், தவறான முறையிலும் செல்கிறது. இதனால் ஒரு சிலர் ஏமாந்து போயுள்ளனர்.
2) பகுதிநேர வேலை (Part Time Jobs) :
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் பகுதி நேர வேலை பார்ப்பது சட்ட விரோதமான செயல். இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும். இந்த குற்றத்திற்காக தண்டனை கிடைப்பது மட்டுமல்லாமல் , சிங்கப்பூருக்குள் நுழைய தடையும் விதிக்கப்படலாம். நீங்கள் எந்த கம்பெனியில் வேலை பார்ப்பதற்காக Work permit வழங்கப்பட்டதோ அந்தக் கம்பெனியில் மட்டுமே வேலை பார்க்க வேண்டும். அதை தவிர்த்து வேறு எந்த கம்பெனியிலும் வேலை பார்க்க கூடாது.பகுதி நேர வேலையும் பார்க்க கூடாது. விதியை மீறி நீங்கள் செயல்பட்டால் கண்டிப்பாக அதற்கான தண்டனை கடுமையாக இருக்கும்.
3) வீடியோ எடுப்பது :
சிங்கப்பூரில் ஒரு சில அரசாங்க அலுவலகங்களிலும், ஒரு சில இடங்களிலும் அறிவிப்பு பலகைகள் இருக்கும். அதில் இங்கு வீடியோ, புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது என்று இருக்கும். அதனை மீறி நீங்கள் புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுத்தால் கைது செய்வதற்கும் வாய்ப்புள்ளது. ஒரு சிலர் அதனை பொருட்படுத்தாமல் வீடியோவோ அல்லது புகைப்படமோ எடுத்தால் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்ப வாய்ப்புள்ளது. வீடியோ எடுப்பதற்கு பயன்படுத்திய கருவிகள் பறிமுதல் செய்யப்படும்.நீங்கள் அறிவிப்பு பலகைகள் ஏதேனும் கண்டால் அதனை நன்கு படியுங்கள். அதில் எல்லா மொழிகளிலும் குறிப்பிட்டிருக்கும். தயவு செய்து தவறேதும் செய்து விடாதீர்கள்.
4) பொது இடங்களில் சண்டையிடுவது :
நீங்கள் யாருடனாவது சண்டையிட்டால் உங்களை தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பும் வாய்ப்புள்ளது. சண்டையின்போது எதிர் நபருக்கு கடுமையான காயங்கள் அல்லது மரணத்தை விளைவிக்கும் வகையில் காயங்கள் ஏற்படும் வகையில் தாக்கி இருந்தால் சிறை தண்டனை விதிக்கப்படலாம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.
5) தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைவது :
சிங்கப்பூரில் ஒரு சில அனுமதிக்கப்படாத தடை செய்யப்பட்ட இடங்கள் இருக்கும். அதற்குள் செல்ல வேண்டாம் என்று அறிவிப்பு பலகைகள் இருக்கும். அந்தப் பலகையில் அனைத்து மொழிகளிலும் குறிப்பிட்டிருக்கும். அதனை உதாசனப்படுத்தி விட்டு விதியை மீறி செயல்பட்டால் கைது செய்ய வாய்ப்புள்ளது.
6) குப்பைகளை போடுவது :
சிங்கப்பூரில் குப்பைகளை போடுவது, புகைப்பிடிப்பது குற்றமாகும். NO SMOKING AREA -வில் புகை பிடிக்கக் கூடாது. முதல்முறை குற்றவாளியாக இருந்தால் அபராதம் விதிக்கப்படும். சிங்கப்பூரில் குப்பைகளை போடுவதால் கூட சிறைக்கு செல்ல வாய்ப்புள்ளது. சிங்கப்பூரில் குப்பைகளை போடுவதால் கூட சிறைக்கு செல்ல வாய்ப்புள்ளது. முதல்முறை குற்றவாளியாக இருந்தால் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் அதே குற்றத்தை புரிந்தால் சிறைக்கு செல்ல கூட வாய்ப்புள்ளது.
நீங்கள் அறியாமல் செய்யும் தவறு உங்களின் வாழ்க்கை மற்றும் கனவுகளுக்கு தடையாக மாறிவிடும். ஆதலால் இது போன்ற தவறுகளை செய்வதை தவிர்த்து விடுங்கள். நீங்கள் எதற்காக சிங்கப்பூருக்கு வந்தீர்களோ அதனை மட்டும் செய்து அதிக அளவில் சம்பாதித்து மனநிறைவுடன் உங்களின் தாய் நாட்டிற்கு செல்லுங்கள்.