வங்கி அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம்!!

சிங்கப்பூரில் வங்கி அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்யும் மோசடிக்காரர்கள் குறித்து சிங்கப்பூர் காவல் படை எச்சரித்துள்ளது.

இந்த மோசடியில், டிசம்பர் மாதம் மட்டும் குறைந்தது 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது S$161,000ஐ இழந்துள்ளனர் என்று அதிகாரிகள் கூறினர்.பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் வங்கி கணக்குகளில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் குறித்து எச்சரிக்கும் குறுஞ்செய்திகளை பெறுவார்கள்.

இந்த குறுஞ்செய்திகள் +65 என்ற எண்களிலிருந்து அவர்களுக்கு அனுப்பப்படுகின்றது.

அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை தடுக்க இணையதள முகவரி ஒன்றை கிளிக் செய்யுமாறு அவர்கள் அறிவுறுத்தப்படுவார்கள்.

இந்த இணையதள முகவரியை பாதிக்கப்பட்டவர்கள் கிளிக் செய்த பிறகு OTP மற்றும் இணைய வங்கி சான்றுகளை வழங்குமாறு அறிவுறுத்தப்படுவார்கள்.

அதன்பிறகு பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது வங்கி கணக்கில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நடந்ததை கண்டறிவார்கள்.

இதுபோன்ற மோசடிகளில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

வங்கிகள் ஒருபோதும் குறுஞ்செய்தி மூலம் எந்த ஒரு linkஐயும் அனுப்பாது என்று அவர்கள் தெரிவித்தனர்.மேலும் யாரிடமும் OTP, வங்கி சான்று போன்றவற்றை பகிர வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

ஒருவேளை பாதிக்கப்பட்டால் உடனடியாக அவர்களது வங்கிக்கு தெரியப்படுத்தும்படி காவல்துறையினர் அறிவுறுத்தினர்.