குடிநுழைவு அதிகாரியின் வீடியோ இணையத்தில் வைரல்….!!ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு…!!!

குடிநுழைவு அதிகாரியின் வீடியோ இணையத்தில் வைரல்....!!ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு...!!!

சிங்கப்பூர்: உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் குடிவரவு அதிகாரி ஒருவரின் புகைப்படம் மற்றும் வீடியோவை இணையத்தில் பதிவேற்றியதாக ஓட்டுநர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனால் 37 வயதான வோங் ஜியோ வா என்பவர் மீது சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) குற்றம் சாட்டப்பட்டது.

இம்மாதம் 12ஆம் தேதி (ஆகஸ்ட் 2024) பாதுகாக்கப்பட்ட பகுதியில் அனுமதியின்றி படங்கள் மற்றும் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர் உள்கட்டமைப்பு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார்.

அதிகாரிகளின் அனுமதியின்றி சோதனைச் சாவடிகள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அவ்வாறு செய்வது குற்றமாகும்.

மேலும் விசாரணையில் குடிநுழைவு அதிகாரி முரட்டுத்தனமாக நடந்து கொண்டார் என்று வோங் கூறினார்.

இந்த சம்பவத்தை வோங் இணையத்தில் பதிவேற்றியதாக நம்பப்படுகிறது.

சோதனைச் சாவடி வளாகத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

பின்பு ஓட்டுனரின் பணி அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டு கடுமையான எச்சரிக்கை கொடுக்கப்பட்டது என்று ICA தெரிவித்துள்ளது.

அவர் வீடியோவை நீக்க ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 20,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.