Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் நடைபெறும் குடமுழுக்கு விழா!

சிங்கப்பூரில் இன்று ஸ்ரீ மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா. கோவில் சௌத் பிரிட்ஜ் ரோட்டில் அமைந்துள்ளது.

இந்த கோவில் மிகப் பழமையான ஆலயம் ஆகும்.தேசிய சின்னமாக 1973-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

குடமுழுக்கு விழா 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது. இதனால் பக்தர்கள் விழாவைக் காண்பதற்காக மழையையும் பொருட்படுத்தாமல் திரண்டுள்ளனர்.

துணைப் பிரதமரும், நிதி அமைச்சருமான Lawrence Wong சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்கிறார்.

சென்ற 2022-ஆம் ஆண்டு 20,000 பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்துக் கொண்டனர். இந்த முறை 25,000 க்கும் அதிகமான பக்தர்கள் கலந்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த நிகழ்ச்சிக்காக 1,800 தொண்டுழியர்களை நியமித்துள்ளனர்.